ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் மாசித் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2023 12:03
துாத்துக்குடி:நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில் மாசி தேரோட்டம் நடந்தது.
இக்கோயிலில் மாசி திருவிழா மார்ச் 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் தினமும் காலை, மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் வலம்வந்தார். நேற்று காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நம்மாழ்வார் காலை 8:00 மணிக்கு தேரில் எழுந்தருளினார். ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று இரவில் தெப்ப உற்ஸவம் நடக்கிறது.