Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லியம்மன் கோவிலில் வராஹி ... கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் அகண்ட மகாமந்திர கீர்த்தனம் கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் அகண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஸ்தானம் அடைந்தார் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் : இன்று கருட சேவை
எழுத்தின் அளவு:
ஆஸ்தானம் அடைந்தார் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் : இன்று கருட சேவை

பதிவு செய்த நாள்

13 மார்
2023
12:03

திருச்சி: திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில் பிரம்மோத்சவ விழாவில் இன்று இரவு கருட சேவை நடைபெறுகிறது.

திருச்சிக்கு அருகில் துறையூர் போகும் வழியில் அமைந்துள்ள இக்கோயில் சோழநாட்டில் அமைந்துள்ள 108 வைணவத் திவ்ய தேசங்களில் நான்கவது திவ்ய தேசமாகும். மூலவர் புண்டரீகாட்ச பெருமாள், உற்சவ மூர்த்தி செந்தாமரைகண்ணன், மற்றும் உற்சவ தாயார் திருநாமம் பங்கயச்செல்வி பங்கஜவல்லி ஆகும். வைணவ திவ்யதேசங்களின் நான்கவதான திருவெள்ளறை திருக்கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோத்சவத்தின் மூன்றாம் திருநாளான நேற்று அதிகாலை உற்சவ மூர்த்திகளான செந்தாமரைக்கண்ணன் மற்றும் தாயார் பங்கயச்செல்வி உடன் அனந்தராயர் மண்டபத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி, ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள வடதிருக்காவிரி (கொள்ளிடம்) ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 9.00 மணியளவில் வந்தடைந்தார். அங்கு ஆஸ்தானம் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோத்சவத்தின் நான்காம் திருநாளான இன்று (13.03.23) அதிகாலை 01.30 மணிக்கு கொள்ளிடத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி  திருவெள்ளறை திருக்கோயிலின் கண்ணாடி அறை சென்றடைந்தார். இரவு 7.30 மணிக்கு உற்சவ மூர்த்தி பெருமாள் கருட வாகனத்தில் புறப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கண்ணாடி அறை சேருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar