பதிவு செய்த நாள்
13
மார்
2023
07:03
கோத்தகிரி: கோத்தகிரி பில்லிக்கம்பை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பிஷல மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் பகல், 12:00 மணிக்கு அம்மன் புறப்பட்டு, 3:00 மணிக்கு, வனக் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று காலை, 9:00 மணி முதல், 12:00 மணி வரை அரக்கோல் நடனத்துடன், அம்மன் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து கங்கா பூஜையுடன், முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பகல், 1:00 மணி முதல், 3:00 மணி வரை, அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 9:00 மணிக்கு, ஸ்ரீ பாரத மாதா பஜனை குழுவினரின், அணைய மண்ணு என்ற படுக சமுதாய சீர்திருத்த நாடகம் நடைபெற்றது. விழாவில், சுற்றுவட்டார பகுதியில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். இன்று (13ம்தேதி) காலை, 8:00 மணிமுதல் 11:30 மணிவரை, கக்கேரய்யா கோவிலில் சிறப்பு பூஜையும், 12:00 மணிக்கு அரக்கோல் ஆட்டத்துடன், விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.