பதிவு செய்த நாள்
14
மார்
2023
07:03
மேட்டுப்பாளையம்: ஆலாங்கொம்பில் உள்ள நாகலிங்கேஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காக, அஷ்ட பைரவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் விழா நடந்தது.
சிறுமுகை அருகே ஆலாங்கொம்பில் நாகலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் துர்க்கை அம்மன் மகளிர் குழு சார்பில், முதலாம் ஆண்டு அஷ்ட பைரவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் விழா நடந்தது. கணபதி வேள்வியுடன் யாக வேள்வி பூஜைகள் தொடங்கின. 64 பைரவருக்கு மிளகு, சத்ரு சம்ஹார யாகம் நடந்தது. பின்னர் நாகலிங்கேஸ்வரர் வேள்வி, தொழில் தடை, கல்வித்தடை, திருமண தடை, நவகோள்கள் தோஷம் நிவர்த்தி யாக பூஜையும், உலக நன்மைக்காகவும் பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து பால், புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் பூஜை நடந்தது. கோவை லட்சுமி நாயக்கன்பாளையம் அருள்ஜோதி தபோவனம் மூத்தி லிங்கத் தம்பிரான் சுவாமி, யாக வேள்வி பூஜைகளை செய்தார். இவ்விழாவில் ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் தலைவர் ராஜேஸ்வரி, முத்துலட்சுமி பாண்டுரங்கன், துர்க்கை அம்மன் மகளிர் குழுவினர், கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் அர்ச்சகர் நாகர் உதயகுமார் சிறப்பு பூஜைகளை செய்தார்.