பழநி: பழநி, வ.உ.சி மன்றம் சார்பாக மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம், உற்சவசாந்தி நடைபெற்றது.
பழநி, மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு உற்சவசாந்தி விழா, வ.உ.சி மன்றம் சார்பாக நடைபெற்றது. மாரியம்மனுக்கு 1008 குடங்களில் தீர்த்தம் எடுத்து தனியார் மடத்திலிருந்து காந்தி ரோடு, பெரிய கடை வீதி, கிழக்கு ரத வீதி, உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. மாலையில் காமேஸ்வரி அம்மன் அலங்காரத்தில், அன்னாபிஷேகம் நடைபெற்றது. இரவு 10:00 மணிக்கு மேல் உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வ.உ.சி மன்றம், தண்டாயுதபாணி சுவாமி மிராசு பண்டாரங்கள் சங்கத்தினர் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.