கண்டாச்சிபுரம், : கெடார் அடுத்த சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தையொட்டி உச்சிகால பூஜை நடந்தது. அதையொட்டி, நேற்று காலை 11:30 மணி முதல் மூலவர் பாலேஸ்வரருக்கும், பாலாம்பிகை அம்மனுக்கும் லலிதா சகஸ்ர நாம அர்ச்சனையும், சிறப்பு அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் வாழைப்பூ கலச பூஜை செய்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.