Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யானை வாகனத்தில் திருவெள்ளறை ... தோளுக்கினியானில் திருப்புளியங்குடி காய்சினிவேந்தப் பெருமாள் திருவீதி உலா தோளுக்கினியானில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் தீர்த்த குளம் தூர்வாரல் ; பிற தீர்த்த மட்டம் குறைவு : திட்டமிடாத கோயில் அதிகாரி
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் தீர்த்த குளம் தூர்வாரல் ; பிற தீர்த்த மட்டம் குறைவு : திட்டமிடாத கோயில் அதிகாரி

பதிவு செய்த நாள்

16 மார்
2023
12:03

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்த குளம் தூர் வாருவதால், பிற கிணற்றில் தீர்த்தம் நீர்மட்டம் குறைந்தது. கோயில் அதிகாரி திட்டமிடல் இன்றி தன்னிச்சை போக்கால், கோடைகாலத்தில் தீர்த்தம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பயபக்தியுடன் நீராடி செல்வார்கள். அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல், தினமும் பல ஆயிரம் பக்தர்கள் நீராடினாலும், 22 தீர்த்தமும் வற்றாத ஜீவநதியாகவே உள்ளது. இதனால் தான் இது புனித தீர்த்தம் என் பக்தர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக 7வது தீர்த்தமான சேதுமாதவர் தீர்த்த குளத்தை தூர்வார மின் மோட்டார் மூலம் 5 அடி உயரத்தில் கிடந்த தீர்த்தத்தை வெளியேற்றி, அங்குள்ள சகதியை கோயில் ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இந்த தூர்வாருவதை யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக கோயில் அதிகாரி எடுத்த முடிவால், பிற 21 கிணற்றிலும் மளமளவென 2 அடி உயரத்திற்கு தீர்த்த மட்டம் குறைந்து உள்ளது. இதனால் கோடை காலமான ஏப்., மே, ஜூனில் பக்தர்கள் நீராட முடியாத அளவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

அலட்சியம் : 4 ஆண்டுக்கு முன்பு மே மாதம் இந்த குளத்தை தூர்வாரினர். அதுவும் தீர்த்தத்தை முற்றிலும் வெளியேற்றாமல், ஊழியர்கள் இறங்கி தீர்த்த நீருடன் சக்தியை அள்ளினர். இதனால் பிற கிணற்றிலும் தீர்த்தம் குறையாமல் இருந்தது. இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், கடந்த 15 நாட்களாக தூர்வாருதல் என்ற பெயரில் பிற தீர்த்தங்களுக்கும் வேட்டு வைத்த கோயில் அதிகாரியின் செயல், பக்தர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வி.எச்.பி., மண்டல அமைப்பாளர் ஆ.சரவணன் கூறுகையில் : மே, ஜூனில் தீர்த்த குளத்தை தூர் வாருவது உகந்தது. ஆனால் கோயில் அதிகாரி அலட்சிய போக்கால் 5 அடி உயரத்தில் இருந்து தீர்த்தத்தை முழுமையாக வெளியேற்றி, பிறர் தீர்த்தங்களையும் தட்டுப்பாடு ஏற்படுத்தியது வேதனைக்குரியது. இதனால் கோடையில் தீர்த்தங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பக்தர்கள் நீராட முடியாமல் போகும். இதுகுறித்து ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பக்தர்கள் பாதிக்கும் நிலை குறித்து நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar