பதிவு செய்த நாள்
16
மார்
2023
07:03
சென்னை: சென்னை தி.நகரில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவில் சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு, அஷ்ட பந்தன சகித மூல விக்ரஹ பிரதிஷ்டா மகோற்சவம் இன்று நடக்கிறது.
சென்னை, தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் பழம்பெரும் நடிகை காஞ்சனா கொடுத்த, 6 கிரவுண்ட் நிலத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், பத்மாவதி தாயார் கோவில் எழுப்பப்பட்டு உள்ளது. நாளை சம்ப்ரோக்ஷணம் நடக்கும் நிலையில், சமீபத்தில் கோவில் கொடிமரப் பிரதிஷ்டை நடந்தது. அதைத் தொடர்ந்து, திருப்பதியில் வடிக்கப்பட்ட பத்மாவதி தாயார், துவாரபாலகர்களான வனமாலி, பலாஹினி சிலைகள், மூல விக்ரஹங்கள், கலசங்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. மூலவர் சிலைகளை, நெல்லில் பிரதிஷ்டை செய்து, ஜலதிவாசம் செய்யப்பட்டது; நேற்று இரவு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், மூல விக்ரஹ பிரதிஷ்டை இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு, இன்று காலை, 7:00 மணி முதல் சதுஷ்டான அர்ச்சனை, மூர்த்தி ஹோமம், பிரயாச்சிதம், பூமஹுதி செய்யப்பட்டது. காலை, 9:00 மணிக்கு அஷ்ட பந்தன சகித மூல விக்ரஹ பிரதிஷ்டை மகோற்சவம் நடந்தது. பின், துவஜஸ்தம்ப சய ஜலதிவாசம் நடக்கிறது. சம்ப்ரோக்ஷண நாளான நாளை காலை, 7:30 மணிக்கு மகா கும்ப சம்ப்ரோக்ஷணம் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு பத்மாவதி, ஸ்ரீனிவாசர் கல்யாண உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, தமிழக ஆலோசனைக்குழு தலைவர் சேகர் தலைமையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.