தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2023 06:03
மானாமதுரை: மானாமதுரை தயாபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று (வியாழன்)காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.
மானாமதுரை தயாபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.இந்தாண்டிற்கான விழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா மற்றும் தீச்சட்டிகள், பால்குடங்கள்,பூ கரகம் எடுக்கும் விழா வருகிற 24ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் கோயில் பூசாரி சுப்பிரமணியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் மானாமதுரை வைகை ஆற்றிலிருந்து பூ கரகம், தீசட்டிகள் பால்குடங்கள் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வலம் வந்து கோயில் முன்பாக பூக்குழி இறங்க உள்ளனர். விழாவில் காட்டும் உடைகுளம்,எம்.ஜி.ஆர் நகர்,கணபதி நகர்,ஆலங்குளம், தயா நகர், சிப்காட் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சார்பில் தினந்தோறும் மண்டகப் படிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் டிஸ்டிகள் சுப்பிரமணியன், நாகராஜன்,முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.