முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா: அம்மனுக்கு 3 டன் பூக்களால் அலங்கராம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2023 04:03
பரமக்குடி: பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி, அம்மனுக்கு 3 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. சக்தி கோஷம் முழங்க பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி, நகரில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள், வியாபாரிகள் பூத்தட்டுகளை வைத்து வழிபட்டனர். நேற்று இரவு 9:00 மணி தொடங்கி ஒவ்வொரு இடத்திலிருந்தும் 50 க்கும் மேற்பட்ட பூத்தட்டுகள் புறப்படாகின. அனைத்து பூத்தட்டுக்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயிலை அடைந்தது. பின்னர் இரவு 1:00 மணி தொடங்கி விடிய, விடிய பக்தர்கள் செலுத்திய சுமார் 3 டன் எடையுள்ள பூக்களால் அம்மனுக்கு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு மலர் கிரீடம் சூட்டி மூலஸ்தானம் தொடங்கி, படிக்கட்டுகள் வரை பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. மேலும் கோயிலில் உள்ள அனைத்து பரிபார தெய்வங்களுக்கும் பூ அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று காலை 11:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. மேலும் அனைத்து பூக்களும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து மார்ச் 28 காலை முத்தாலம்மன் கோயிலில் கொடி ஏற்றத்துடன் பங்குனி விழா தொடங்க உள்ளது.