திருவெண்ணெய்நல்லுார் திரவுபதி அம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2023 04:03
திருவெண்ணெய்நல்லுார்,: திருவெண்ணெய்நல்லுார் திரவுபதி அம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
அதனையொட்டி கடந்த 9ம் தேதி பகாசூரனுக்கு அன்னமிடுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. 16ம் தேதி இரவு 8:00 மணிக்கு கரகத் திருவிழாவும், 10:00 மணிக்கு அலகு நிறுத்துதலும் நடந்தது. 17ம் தேதி மாடு வளைத்தல், குறவன், குறத்தி ஆட்டம், காலி வேடமணிந்து கோட்டை இடித்தல் நடந்தது. பின், இரவு 8:30 மணிக்கு தீ மிதி விழா நடந்தது. நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழாவில் பாஞ்சாலி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை திருவெண்ணெய்நல்லுார் சக்திவேல், பழனிவேல் குடும்பத்தினர் செய்திருந்தனர்.