புதுச்சேரி: சிங்கிரிகோவில் அயிற்றூர் ஸ்ரீமகாதேவர் கோவில் கட்டுவதற்கான பூஜை இன்று நடக்கிறது. புதுச்சேரி அடுத்த, சிங்கிரிகோவில் தெப்பல் தாமரைக்குளக்கரையில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அயிற்றூர் ஸ்ரீமகாதேவர் கோவில் உள்ளது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் கட்டுவதற்கு முன் தோற்றுவிக்கப்பட்ட இக்கோவில் காலப்போக்கில் சேதமடைந்தது. தற்போது, இக்கோவிலை புதிதாகக் கட்டுவதற்கான பூர்வாங்க பூஜை இன்று (16ம் தேதி) காலை 9 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சியில், கோமாதா பூஜை, யாகம், தேவாரம், திருவாசகம் ஓதப்படுகிறது. முன்னதாக நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ள மகாதேவர், அரசு-வேம்பு மரத்தடியில் உள்ள விசித்திர விநாயகருக்கு பூஜைகள் நடக்கின்றன.நல்ல செல்லத் துரை, ராசன், இளங்கோ ஆகியோர் தமிழில் வேள்வி நடத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்துள்ளனர்.