பதிவு செய்த நாள்
22
மார்
2023
02:03
தஞ்சாவூர்; கும்பகோணம், ராமசுவாமி கோவிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ராமசுவாமி கோவில், தென்னகத்தின் அயோத்தி என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையடுத்து நேற்று மாலை அனுக்ஞை, மிருத்சங்கி–ரஹணம், கருடப்ரதிஷ்டை பூஜைகள் நடந்து. பின்னர் இன்று காலை கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடந்தது. சீதா, ராமர், லெட்சுமணன், ஆஞ்சநேய சுவாமிகள் கொடிமரத்தின் முன்பாக, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து இரவு இந்திர விமானத்தில் வீதியுலாவும், 2ம் நாள் சூர்யப்ரபை, 3-ம்நாள் சேஷ வாகனம், 4ம் நாள் ஓலைச்சப்பரத்தில் கருடசேவையும், 5ம் நாள் அனுமந்த சேவையும், 6-ம் நாள் யானை வாகனத்திலும், 7ம் நாள் கோரதம் மற்றும் புன்னைமரம் வாகனங்களிலும், 8ம் நாள் குதிரை வாகனத்துடனும் வீதிஉலா நடைபெறுகிறது. 9ம் நாள் காலை 8 மணிக்கு மேல் தேரோட்டமும், 10ம் நாள் சப்தாவர்ண விழாவும், மறுநாள் (ஏப்ரல்.1) விடையாற்றி விழாவும் நடைபெறுகிறது. இவ்விழா ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் வெங்கடசுப்ரமணியன், செயல் அலுவலர் மகேந்திரன் மற்றும் பணியாளர்கள், ராமசரணம் டிரஸ்ட் பக்தர்கள் செய்து வருகின்றனர்.