பதிவு செய்த நாள்
22
மார்
2023
02:03
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி -பங்குனி திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் , 67 வது மாசி பங்குனி திருவிழா கடந்த மார்ச் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி பால்குடம், தீச்சட்டி எடுத்து வந்தனர். தொடர்ந்து, கோயில் கரகம் மது முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய திருவிழாவான பால்குடம், காவடி, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்திகள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தினர். நகர் முழுவதும் மஞ்சள் மயமாக காட்சி அளித்தது. தொடர்ந்து பக்தர்கள் தீச்சட்டி, காவடி எடுத்தும், அலகு குத்தியும் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை மாலை பருப்பூரணியில் கரகம் சேர்க்கும் நிகழ்ச்சியும், இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மார்ச் 23, இரவு அம்மன் திருவீதி உலாவும் 24 ஆம் தேதி சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் மகேந்திர பூபதி, கணக்கர் அழகுப்பாண்டி செய்திருந்தனர். பக்தர்களுக்காக நகர் முழுவதும் ஆங்காங்கே அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.