பள்ளிகொண்டேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தின் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2023 06:03
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி அடுத்துள்ள ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தின் உண்டிகள் மூலம் ரூ.2,31,555/- வருமானம் நேற்று செவ்வாய்க்கிழமை (21.3.2023)ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோயில் செயல் அலுவலர் கே.ராமச்சந்திர ரெட்டி மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஏ.வி.எம். முனிச்சந்திரசேகர் ரெட்டி (பாலாஜி ரெட்டி) முன்னிலையில் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர் அதில் கடந்த 24 நாட்களுக்களில் உண்டியல் மூலம் ₹.2,31,555/- வருவாய் வந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கே.ஆனந்த், எஸ்.எம்.சுரேஷ், ஜி.முனிவேலு, பி.சத்யா ரமேஷ், நாகலாபுரம் காவல் நிலைய காவலர் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.