பதிவு செய்த நாள்
23
மார்
2023
04:03
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் அனுமன் கோயில்களில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயிலில் மார்ச் 21 காலை 10:00 மணிக்கு அனுக்கையுடன் விழா துவங்கியது. மார்ச் 22 காலை 10:00 மணிக்கு ராமர், சீதை, லட்சுமணன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கருட கொடியேற்றப்பட்டது. அன்று தொடங்கி தினமும் காலை 10:15 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு ராமர் வாமன, காளிங்க நர்த்தன, பாண்டுரங்கன், கூடலழகர், கள்ளழகர், தவழும் கண்ணன் என அலங்காரமாகி வீதி வலம் வருகிறார். மார்ச் 28 மாலை இரண்டு கருட சேவை, மார்ச் 29 காலை 6:00 மணிக்கு உத்திர காமேஷ்டி யாகம் நடந்து, குழந்தை வரம் வேண்டுவோருக்கு பாயாசம் பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் ராமநவமி விழாவும், மார்ச் 31 காலை 12:00 மணிக்கு சீதாராமர் திருக்கல்யாணம் நடக்க உள்ளது.
*எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் பெருமாள் கோயிலில் மார்ச் 22 ல் ராமநவமி விழா துவங்கியது. தினமும் காலை, மாலை ஆஞ்சநேயர் பல்வேறு திருக்கோலங்களில் அருள் பாலிக்கிறார். மார்ச் 29 மாலை 5:00 மணிக்கு புத்திர காமேஷ்டி யாகம், மறுநாள் ராம நவமி விழா நடக்கிறது.