பதிவு செய்த நாள்
24
மார்
2023
08:03
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை யாக சாலை பூஜைகள் துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்க விமான திருப்பணி தனியாக நடக்கிறது. மற்ற விமான, ராஜகோபுர , சுவாமி சன்னதிகளுக்கு திருப்பணி பூர்த்தியாகி மார்ச் 27ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று காலை 10:15 மணிக்கு ஆச்சார்யர் ராமகிருஷ்ண பட்டாச்சார்யர் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து மூலவர் சன்னதியில் அனுமதி வாங்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, வாஸ்து ஹோமம், யாக சாலை வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை நடந்தது. பின்னர் மாலை 5:15 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை பூஜைகள் நடந்து, கும்ப பூஜை நடந்தது. பின்னர் 60 பட்டாச்சார்யர்கள் கலசங்களுடன் புறப்பாடாகி யாகசாலையில் பிரவேசித்தனர். தொடர்ந்து யாகசாலையில் அமைக்கப்பட்டுள்ள 32 வேதிகை, 44 குண்டங்களில் முதற்கால யாக பூஜைகளை துவக்கினர். நிறைவாக பூர்ணாகுதி திருவாராதனம் நடந்தது.
இன்று முதல் தினசரி காலை 7:00 மணி மற்றும் மாலை 4:00 மணிக்கு யாக சாலை பூஜைகள் நடைபெறும். தினசரி 2 கால பூஜைகள் வீதம் 3 நாட்கள் நடைபெறும். மார்ச் 27 காலை 8:05 மணிக்கு 8ம் கால யாகபூஜைகள் நிறைவடைந்து, யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி, காலை 9:38 முதல் 10:32 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். பின்னர் அலங்கார திருவாரதனம் நடைபெறும். காலை 11:50 மணிக்கு ஸர்வ தரிசனம் நடக்கும். இரவு 9:00 மணிக்கு சுவாமி தங்க கருட வாகனத்திலும், திருக்கோட்டியூர் நம்பிகள், எம்பெருமானார் தங்கப்பல்லக்கிலும் திருவீதிப் புறப்பாடு