பதிவு செய்த நாள்
24
மார்
2023
08:03
ஸ்ரீவைகுண்டம்: பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோயிலில் கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பெருங்குளத்தில் நவதிருப்பதி பெருமாள் கோயில்களில் 6வது கோயிலாக பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில், கடந்த 18ம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 5ம் திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கருடசேவை நடந்தது. காலை 6மணிக்கு விஸ்வரூபமும், 7 மணிக்கு திருமஞ்சனம், 8.30மணிக்கு தோளுக்கினியானில் பெருமாளின் திருவீதி புறப்பாடும், 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. இரவு 7 மணிக்கு மாயக்கூத்தப்பெருமாள் கருட காகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் அர்ச்சகர்கள் வெங்கடேசன், சுந்தரம், பிச்சைமணி, சுந்தர நாராயணன், ஸ்தலத்தார்கள் சீனிவாசன், ராமானுஜம், ஸ்ரீதர், ஸ்ரீகாரியம் அஸ்வின், அரவிந்த், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், சிவலோநாயகி, ஸ்ரீவை., கள்ளப்பிரான் சுவாமி கோயில் ஸ்தலத்தார் ராஜப்பாவெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.