பதிவு செய்த நாள்
24
மார்
2023
12:03
அவிநாசி: அவிநாசி அடுத்த ஆட்டையாம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள பூச்சக்காட்டுக் கருப்பராயர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குடம் ஊர்வலம் நடைப்பெற்றது.
அவிநாசி அடுத்த ஆட்டையாம்பாளையத்தில் குடிகிணறு தோட்டம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூச்சக்காட்டு கருப்பராயர் கோவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக போற்றப்படுகிறது. இக்கோவில் சன்னதி மேடைகள், கன்னிமூல கணபதி, பாலமுருகன் சன்னதி, சுற்றுச்சுவர்கள், கோவில் மேல் நிழல்கூரை ஆகியவை மரமாத்து பணிகள் முடிந்து,திருப்பணிக்கான வேலைகள் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் ஸ்ரீ அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஆட்டையாம்பாளையத்திலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மங்கள இசையுடன் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமத்துடன் கும்பாபிஷேகத்திற்கான முதல் கால வேள்வி யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றது. 27ம் தேதி, வாஸ்துசாந்தி வேதிகார்ச்சனை, புண்யாகவாஜனம் உள்ளிட்ட ஹோம நிகழ்ச்சிகளை தொடர்ந்து யாத்ரா தானம் கடம் புறப்பட்டு,ஸ்ரீ பூச்சக்காட்டு கருப்புராயர் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம்,சிவஸ்ரீ ஸ்ரீனிவாச சிவாச்சாரியார் தலைமையில் நடைபெறுகின்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தசதானம், தசா தரிசனம், மஹா அபிஷேகம், தீபாரதனை உள்ளிட்டவைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து கோவில் திருப்பணி குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.