புனித ரமலான் : காரைக்கால் பெரிய பள்ளிவாசலில் முதல் நாள் நோன்பு திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2023 11:03
காரைக்கால்,: காரைக்காலில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நோன்பு திறப்பு அனைத்து பள்ளி வாசல்களில் திறக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜானை முன்னிட்டு, பிறை பார்த்து அடுத்த 30 நாட்களுக்கு விரதம் எனப்படும் நோன்பு கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையுடன் முதல் நாள் நோன்பை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அதன்படி புகழ்பெற்ற காரைக்கால் பெரிய பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது அனைத்து மக்கள் நலனுடன் இருக்கவேண்டும் என்று தொழுகையில் ஈடுப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து நோன்பு கஞ்சி, பேரிச்சம்பழம்,கடற்பாசி, குளிர் பானங்கள் கொண்டு இஸ்லாமியர்கள் நோன்பு திறந்தனர்.இதில் 500க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.