பதிவு செய்த நாள்
25
மார்
2023
12:03
பழநி: பழநி, கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் மார்ச்.29.,ல் துவங்க உள்ளது.
பழநி, அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில், பங்குனி உத்திர திருவிழா, மார்ச்.29.,ல் காலை 10:45 மணிக்கு மேல் 11:45 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. மார்ச்.30,முதல் ஏப்.,4, வரை, காலையில் வள்ளி தெய்வசேனா முத்துக்குமாரசுவாமி, தந்த பல்லாக்கில் கிரிவீதி உலா நடக்கும், நாள்தோறும் மாலையில் வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, தங்கமயில், தங்கக் குதிரை, வெள்ளி பிடாரி, வெள்ளி யானை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். பங்குனி உத்திர திருவிழா உற்சவத்தில் ஆறாம் நாளான ஏப்.,3ல், மாலை 5:45 மணிக்கு மேல் 6:45 மணிக்குள், சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இரவு 8:30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு சன்னதி வீதி, கிரி வீதியில் நடைபெறும்.
பங்குனி உத்திர தினமான ஏப்..4., அன்று காலை 4:30 மணிக்கு மேல் 6:00 மணிக்குள் தீர்த்தம் வழங்குதல் நடைபெறும். மாலை 4:45 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து, கிரி வீதியில் தேரோட்டம் நடைபெறும். தேர்க்கால் பார்த்தல் நடைபெறும். ஏப்.5,ல் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, ஏப்.6,ல் வெள்ளி பிடாரி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏப்.7 அன்று மாலை 7:00 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சன்னதி வீதியில் திருஉலா காட்சி நடைபெறும். இரவு கொடி இறக்குதல் நடைபெற்று தங்க குதிரை வாகனத்தில் சுவாமி ஊர் கோயில் அதுக்கு எழுந்தருளால் நடைபெறும். தினம்தோறும் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கத்தில் கோயில் நாதஸ்வர, தவில் பள்ளி மாணவர்கள் மங்கள இன்னிசை நடைபெறும். மேலும் சலங்கையாட்டம், பத்தி சொற்பொழிவு, பக்தி இசை, நாதஸ்வர இசை, நாட்டுப்புற கலை, பரதநாட்டியம், கிராமிய கலை, வீணை இசை, கும்மி நிகழ்ச்சி போன்றவை நாள்தோறும் நடைபெற உள்ளது.