பதிவு செய்த நாள்
25
மார்
2023
05:03
கடலுார் : கடலுார், புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷக மண்டலாபிஷேகம் நிறைவு பூஜை நடந்தது.
கடலுார், புதுவண்டிப்பாளையத்தில் 300 ஆண்டுகள் பழமையான சிவசுப்ரமணியர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. கடலில் வீசப்பட்டு, இப்பகுதியில் கரையேறிய திருநாவுக்கரசருக்கு முருகப்பெருமான் காட்சி அளித்ததால், இப்பகுதியில் முருகனுக்கு கோவில் அமைக்கப்பட்டதாக வரலாறு. இக்கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த மாதம் 5ம் தேதி, கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜை நடந்து வந்தது. நேற்றுடன் மண்டலாபிேஷகம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு யாக பூஜை துவங்கியது. நேற்று காலை 5:00 மணிக்கு திருமுறை பாராயணம், வேத பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, 7:00 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு மண்டலாபிஷேகம், 9:00 மணிக்கு சிவ சுப்ரமணியர் சுவாமிக்கு மண்டலாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.