Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மடப்புரத்தில் ஆக்ரமிப்பால் ... பராசக்தி மாரியம்மன் கோயில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2023
03:03

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் பூமி நீளா சமேத சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலுக்கு 19 ஆண்டுகளுக்குப் பின் நாளை காலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் 108 வைணவத் தலங்களுல் முதன்மையானது. மூலவர் சன்னதி அஷ்டாங்க விமானத்தை பெற்ற சிறப்புடையது. இந்த விமானத்திலிருந்து பொதுமக்களுக்கு திருமந்திரத்தை ராமானுஜர் உபதேசித்த பெருமைக்குரியது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலம் ஆகும். தேவர்களை துன்புறுத்திய அசுரன் இரண்யனை வதம் செய்ய விஷ்ண தேவர்களுடன் கூடி ஆலோசித்த தலம், நரசிம்ம அவதார கோலம் காட்டிய தலம், அத்துடன் விஷ்ணு நின்ற, கிடந்த, இருந்த, நடந்த ஆகிய நான்கு கோலங்களில் காட்டியருளியதோடு இங்கேயே எழுந்தருளியதாக புராணங்கள் கூறுகின்றன. இக்கோயிலுக்கு கடந்த 1961, 1992, 2004 ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தற்போது தங்க விமானத் திருப்பணி தவிர்த்து மற்ற திருப்பணி நடந்து 19 ஆண்டுகளுக்குப் பின் நாளை கும்பாபிஷேம் நடைபெறுகிறது. மார்ச் 23ல் 32 வேதிகை, 44 குண்டங்களுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. பிரதான பட்டாச்சார்யர் ராமகிருஷ்ணன் தலைமையில் 60 பட்டாச்சார்யர்கள் பூஜைகள் செய்ய, இன்றுடன் ஏழு கால யாகபூஜைகள் பூர்த்தியாகின்றன. நாளை அதிகாலை 5:00 மணிக்கு பூஜைகள் துவங்கி 8:05 மணிக்கு 8ம் கால யாகபூஜை பூர்த்தியாகிறது. தொடர்ந்து கலசங்கள் புறப்பாடாகி காலை 9:38 மணியிலிருந்து காலை 10:32 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும். பின்னர் அலங்கார திருவாரதனம் நடைபெறும். காலை 11:50 மணிக்கு ஸர்வ தரிசனம் நடக்கும். இரவு 9:00 மணிக்கு சுவாமி தங்க கருட வாகனத்திலும், திருக்கோட்டியூர் நம்பிகள், எம்பெருமானார் தங்கப்பல்லக்கிலும் திருவீதிப் புறப்பாடு நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar