பராசக்தி மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2023 03:03
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி இரவில் வெள்ளி சப்பரத்தில் அம்மன் நகர்வலம் நடக்கிறது. ஏப்.9 வரை பல்வேறு மகமைகளின் மண்டகப்படியில் சிறப்பு வாகனங்களில் அம்மன் எழுந்தருளுகிறார். ஏப்.2ல் பங்குனி பொங்கல் நடக்கிறது. இதில் கோயிலை சுற்றி ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். ஏப்.3ல் காப்புக்கட்டி விரதம் இருந்த கயிறு குத்தி, அக்னிச்சட்டி ஏந்தி கோயிலுக்கு வந்து பிரார்த்தனை நிறை வேற்றுவர். கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து காவடி, பறவை காவடி, அலகு குத்தி தேரிழுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். ஏப். 4ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார் தேவஸ்தான நிர்வாகிகள் செய்கின்றனர்.