காரைக்கால் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2023 02:03
காரைக்கால்: காரைக்கால் மேலகாசாகுடி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
காரைக்கால் நெடுங்காடு கொம்யூன் மேலகாசாகுடி தென்பாதி பகுதியில் உள்ள ஸ்ரீபாலவிநாயகர், ஸ்ரீபாலமுருகன்.ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மிகசிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் துவக்கியது.நேற்று முன்தினம் மூன்றாம் காலயாகபூஜை முடிவடைந்து இன்று நான்காம் காலம் துவங்கி கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் வாத்தியம் முழக்க விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் விழாக்குழுவினர் தலைவர் செந்தில்குமார், செயலாளர் அசோக்குமார் பொருளாளர் வீரராகவன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபி பேஷகத்தை கண்டுக்களித்தனர்.இரவு அம்மாள் வீதியுலா நடைபெறுகிறது.