Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் ... கோதண்ட ராமர் கோயில் திருக்கல்யாணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தத்தில் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2023
04:03

நத்தம், நத்தம் வெட்டுகாரத்தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் முதல்நாள் அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி,முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து அம்மனுக்கு மண்டப சாந்தி, கோ பூஜை, மஹா பூர்ணாகுதி தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்த மலை, காசி, ராமேசுவரம், வைகை, திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வந்து பின்னர் கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் கலசத்தில் ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அவர்களுக்கு பூஜை மலர்களும்,புனித தீர்த்தமும்,அறுசுவை

உணவு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என். கண்ணன், தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவலிங்கம், பிரேமா விஜயன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், உமாமகேஸ்வரி, ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வெட்டுக்காரத்தெரு, செட்டியார்குளத்தெரு ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar