ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் சிங்கராஜா கோட்டை கோதண்ட ராமஸ்வாமி கோயில் திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு கடந்த 21 ல் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் 10 நாள் திருவிழா தொடங்கியது. இதனை அடுத்து தினமும் சுவாமி சிம்ம வாகனம், அனுமந்த, சேஷ, கருட வாகனங்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. நான் லட்சுமண, சீதா, அனுமன் சமேத கோதண்ட ராமஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் திருமண கோலத்துடன் ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டு திருமண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.