குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 04:03
செந்துறை, நத்தம் அருகே செந்துறை குரும்பபட்டி மகாலெட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவார். இதையொட்டி கடந்த மார்ச் 19-ந்தேதி காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர். தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்தும், அக்னிசட்டி, முளைப்பாரி, மாவிளக்கு, பால்குடம் எடுத்தல், பறவை காவடி, தொட்டில் காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தொடர்ந்து பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஏற்பாடுகளை குரும்பபட்டி மகாலட்சுமி கோயில் திருப்பணிக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.