திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த ஆதிச்சனூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த ஆதிச்சனூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மகாபூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி, 9:30 மணிக்கு காமாட்சி அம்மன் மூலகோபுர கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.