Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில் ... வடகாட்டுப்பட்டியில் 31அடி உயர மகாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம் வடகாட்டுப்பட்டியில் 31அடி உயர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பழநியில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

28 மார்
2023
04:03

பழநி: பழநி, கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் (மார்ச்.29‌.,) நாளை துவங்க உள்ளது.

பழநி, அடிவாரம், திருஆவினன்குடி கோயிலில், பங்குனி உத்திர திருவிழா நாளை (மார்ச்.29‌.,) காலை 10:45 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற உள்ளது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், ஈரோடு மாவட்டம் கொடுமுடி, காவிரி நதியிலிருந்து புனித நீரை தீர்த்தக்காவடியாக எடுத்து வந்து அபிஷேகம் செய்து முருகனை வழிபடுவது வழக்கம். திருவிழா நாட்களில் ஏப்.,4 வரை வள்ளி தெய்வானை முத்துக்குமாரசுவாமி, தந்த பல்லாக்கில் கிரிவீதி உலா நடைபெற உள்ளது. பங்குனி உத்திர திருவிழா உற்சவத்தில் ஆறாம் நாளான ஏப்.,3ல், மாலை 5:45 மணிக்கு மேல் 6:45 மணிக்குள் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெறும். அன்று இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு சன்னதி வீதி, கிரி வீதியில் நடைபெற உள்ளது.

பங்குனி உத்திர தினமான ஏப்..4.,ல் காலை தீர்த்தம் வழங்குதல் நடைபெறும். கிரிவீதியில் மாலை 4:45 மணிக்கு மேல் திருத்தேரோட்டம் நடைபெறும். அதன் பின் தேர்க்கால் பார்த்தல் நடைபெறும். மாலையில் வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, தங்கமயில், வெள்ளி யானை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏப்.5,ல் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, ஏப்.6,ல் வெள்ளி பிடாரி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. ஏப்.7., இரவு கொடி இறக்குதல் நடைபெறும். அதன்பின் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி பெரிய நாயகி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளால் நடைபெறும். தினம்தோறும் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கத்தில் கோயில் நாதஸ்வர, தவில் பள்ளி மாணவர்கள் மங்கள இன்னிசை நடைபெறும். மேலும் சலங்கையாட்டம், பத்தி சொற்பொழிவு, பக்தி இசை, நாதஸ்வர இசை, நாட்டுப்புற கலை, பரதநாட்டியம், கிராமிய கலை, வீணை இசை, கும்மி நிகழ்ச்சி போன்றவை நாள்தோறும் நடைபெற உள்ளது‌. பங்குனி உத்திர நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar