மந்தை கருப்பண்ண சுவாமி கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2023 03:03
மேலுார்: மேலுார், உறங்கான்பட்டி மந்தை கருப்பண்ண சுவாமி கோயிலில் உள்ள ராக்காயி அம்மன் பங்குனி திருவிழா நடைபெற்றது. மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி பக்தர்கள் 7 நாட்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். இன்று காலை கோயிலில் துவங்கிய முளைப்பாரி ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று 2 கி.மீ.,தொலைவில் உள்ள நாட்டாமுத்தி அய்யணார் ஊருணியை அடைந்தது. அங்கு முளைப்பாரி கரைக்கப்பட்டது. இவ் விழாவில் வெள்ளலுார்,உறங்கான்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.