அவிநாசி சாய் பாபா மந்திர், வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2023 02:03
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ சாய் பாபா மந்திர் கோவிலிலும்,ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் ஸ்ரீ ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. அவிநாசி, மங்கலம் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் பாபா மந்திர் மற்றும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலான ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில்,ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு,ஸ்ரீ சீதாராமர் விவாஹ மஹோத்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ சாய் பாபா மந்திர் கோவிலில், திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள், ஆனைமலை பூஜ்ய ஸ்ரீததோவானந்த சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில்,ஸ்ரீ சீதாராமர் விவாஹ மஹோத்சவம், பலவிதமான சீர்வரிசை பலகாரங்களுடன் நடைபெற்றது. இதில் கோவை கோபாலகிருஷ்ணன் நாட்டிய நடனம் நடைபெற்றது. அவிநாசி வீர ஆஞ்சநேயர் கோவிலில்,ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவையின் ஏற்பாட்டில் ஸ்ரீ ராமநவமி விழா சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளுடன் நடைபெற்றது. இதில் உற்சவர் சீதாராமர் லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற ஸ்ரீ சீதாராம விவாஹத்தில்,ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.