திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை அடுத்து மண்டலாபிஷேக பூஜைகள் துவங்கின. இக்கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பின் மார்ச் 27ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மறுநாள் முதல் மண்டலாபிஷேக பூஜைககள் துவங்கியுள்ளன. தினசரி மூலவர் சுவாமி தவிர ஆண்டாள், தாயார், கிருஷ்ணர், ஆழ்வார்கள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு காலை 9:00 மணி முதல் அபிஷேகம் நடைபெற்று, அலங்காரத் தீபாரதனை நடைபெறும். பின்னர் மதியம் 12:30 மணிக்கு உச்சிக்கால பூஜையில் தயிர்சாத நைவேத்யம் அளிக்கப்படும். தொடர்ந்து 48 நாட்களுக்கு நடைபெறும்