கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2023 03:03
சிவகங்கை : கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகங்கை மாவட்டம் அரியாகுறிச்சி குறிச்சி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக வெட்டுடையார் காளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் செய்யப்பட்டது. பின் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கொடியேற்றம் நடந்தது. விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.