Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி பட்டாபிராம சுவாமி கோவிலில் ... செய்யாறு விஜயகோதண்டராம் கோவிலில் ராம நவமி சிறப்பு வழிபாடு செய்யாறு விஜயகோதண்டராம் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தியநாத சுவாமி கோவிலில் நாய் ஓட்டம் நரி ஓட்ட வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைத்தியநாத சுவாமி கோவிலில் நாய் ஓட்டம் நரி ஓட்ட வைபவம்

பதிவு செய்த நாள்

30 மார்
2023
10:03

மயிலாடுதுறை: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு நாய் ஓட்டம் நரி ஓட்டம் எனும் யானை ஓடி விளையாடும் வைபவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிவிலல் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாகவும், மேலும் சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரியும் தனி சன்னிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில்  பிரமோற்ச்சவ திருவிழா கடந்த 27  ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான இன்று  முருகபெருமானின்   தந்தையாகிய வைத்தியநாதசுவாமியும், தாயாகிய தையல்நாயகி அம்மனும் தீர்த்த வாரிக்காக வீதியுலா செல்லும் போது ஆலயத்தில் தனியாக இருக்கும் முருக பெருமானுக்கு  விளையாட்டு காட்டுவதற்காக யானை ஓடிவந்து, ஓடிவந்து வணங்கி விளையாடுவது ஐதீகம்,  பிரம்மோற்ச்சவ விழாவின் மூன்றாவது நாளான இன்று பரிவாரங்களுடன் அம்பாள் சுவாமி தீர்த்தவாரிக்கு புறப்பட்டனர். சுவாமிகள் வீதியுலா செல்லும் வரை அமைதியாக நிற்க்கும் யானை, பின்னர்  முருக பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளும் போது அதிவேகமாக ஓடி,ஓடி  மீண்டும் திரும்பி ஓடிவந்து சப்தம்  எழுப்பியவாறு முருகபெருமானை வணங்கி விளையாடியது. நாய் ஓட்டம் நரி ஓட்ட வைபவம்  என்று அழைக்கப்படும்  யானை ஓடும் இக்காட்சியை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.அதனை தொடர்ந்து அஸ்திரதேவர், விநாயகர், அம்பாள், சண்டிகேஸ்வரர் வீதியுலா நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar