பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது.
இக்கோயிலில் ராமநவமி விழா மார்ச் 22 ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. அன்று முதல் தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், மாலை பல்வேறு அலங்காரங்களில் ராமர் வீதிவலம் வருகிறார். மார்ச் 29 காலை ஸ்ரீ ராமர், பாண்டுரங்கர் அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு புத்திர காமேஷ்டி யாகம் நடந்தது. அப்போது குழந்தை வரம் வேண்டுவோருக்கு பாயாசம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று காலை 10:30 மணிக்கு ராமர் ஜனத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் உள்ளிட்டவருக்கு வெள்ளி கவசம் சாற்றி ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் நெல் மற்றும் காசுகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. மாலை வைஷ்ணவ சபையாரின் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. நாளை காலை 12:00 மணிக்கு சீதாராமர் திருக்கல்யாணம் நடக்கிறது.
*பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் 30 ஆம் ஆண்டு ராமநவமி விழாவையொட்டி ஏகதின லட்சார்ஜனை விழா நடந்தது. *எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.