பதிவு செய்த நாள்
31
மார்
2023
10:03
பெரியகுளம்: பெரியகுளம் கோயில்களில் ராமநவமி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வடகரை அரண்மனை தெரு கோதண்டராமர் கோயிலில் மூலவர் ராமர், லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர், ராமர் பட்டாபிஷேகம் அலங்காரத்தில் காட்சியளித்தார். சுவாமிகளுக்கு பூஜைகளை அர்ச்சகர் கோவிந்தராஜ் செய்திருந்தார். பாம்பாற்று ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர், ராமரை தோளில் நிறுத்தி வைத்திருந்தார். மற்றொரு புறம் மலர் அலங்காரத்திலும், மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் தியானநிலையில் காட்சியளித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஷீரடி சாய்பாபா கோயிலில் ராமநவமியை முன்னிட்டு ஹோமம் பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ராமநவமி விழா நடந்தது. திருமஞ்சனம், துளசி பூஜை, மதுரகீதம், கூட்டு பிரார்த்தனை, கிருஷ்ணசைதன்யதாஸ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். கிருஷ்ணர், ராதை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. கோபாலகிருஷ்ணன் கோயிலில் ராமநவமியை முன்னிட்டு கலச பூஜை, பஞ்சசூக்த ஹோமம், ஸ்ரீ ராமருக்கு மூல மந்திர ஹோமம், பூர்ணாஹுதி, திருமஞ்சனம் கிருஷ்ணர், ராமர், லட்சுமணர், சீதைக்கு அலங்காரம நடந்தது. ஏற்பாடுகளை அர்ச்சகர் கண்ணன் செய்திருந்தார். வடகரை மேதகாரபடித்துறை ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.