காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி பெருமாள் கோயிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2023 10:03
காரைக்குடி: காரைக்குடி உள்ள ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி பெருமாள் கோயில் தேரோட்டம் நடந்தது.
காரைக்குடி செஞ்சையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி பெருமாள் கோயில் பங்குனி .திருவிழா கடந்த மார்ச் 22 ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, பெருமாள் சிம்ம, கருட உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. கிருஷ்ணமூர்த்தி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.