அன்னூர்: குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில் தேர்த் திருவிழா இன்று (31ம் தேதி) துவங்குகிறது.
குமாரபாளையத்தில் பழமையான வட்டமலை ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் எப்போதும் வற்றாத சுனை உள்ளது. இங்கு 13ம் ஆண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று (31ம் தேதி) காலை 10:00 மணிக்கு கிராம தேவதை வழிபாடுடன் துவங்குகிறது. இரவு 8:00 மணிக்கு கிராம சாந்தி நடக்கிறது. வரும் ஏப். 1ம் தேதி காலை 7:00 மணிக்கு கணபதி பூஜையுடன், கொடியேற்றம் நடக்கிறது, மாலையில் யாகசாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து 4ம் தேதி வரை தினமும் காலையில் யாகசாலை பூஜையும், மாலையில் சுவாமி உட்பிரகார உலாவும் நடக்கிறது. வரும் 4ம் தேதி மாலை 5:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. வரும் 5ம் தேதி காலை 10:30 மணிக்கு தேரோட்டம் துவங்கி நடக்கிறது. மோள காளிபாளையம் பாலமுருகன் குழுவின் காவடி ஆட்டம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு பல்லடம், வள்ளி முருகன் குழுவின் வள்ளி கும்மியாட்டம் நடக்கிறது.