பதிவு செய்த நாள்
31
மார்
2023
07:03
சோழவந்தான்: சோழவந்தானில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீஜெனக நாராயண பெருமாள் கோயிலில் ராம நவமி சிறப்பு பூஜைகள் நடந்தது.
இக்கோயிலில் உள்ள மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீராமர், சீதா தேவி, லெட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் நம்மாழ்வார், இராமானுஜர், ஞான தேசிகர் ஆகியோருக்கு காட்சி தரும் வகையில் சிறப்பு தரிசனங்கள் நடந்தது. இந்நிகழ்வில் கிருஷ்ண பட்சம், புனர்பூச நட்சத்திரத்தில் நவமி நாளான நேற்று அர்ச்சகர் ஸ்ரீபதி தலைமையில் ஸ்ரீராமர் ஜெனனம் நடந்தது. இதையடுத்து நவகலச பூஜைகள் செய்து, யாக வேள்வி நடத்தினர். தொடர்ந்து மந்திரங்கள் முழங்க ஸ்ரீராமர், லெட்சுமணர், சீதா தேவியுடன் ஆஞ்சநேயருக்கும் திருமஞ்சனம் நடந்தது. இவ்விழாவில் உபதாரர் அலமேலு அம்மாள், ஹயக்ரீவர் சீனிவாசன் குடும்பத்தினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். செயல் அலுவலர் சுதா, தக்கார் அங்கயற்கண்ணி, கணக்கர் முரளிதரன் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.