பங்குனி உத்திர திருவிழா: பழநியில் பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2023 10:04
பழநி: பழநி, பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.
பழநியில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி நதியில் இருந்து தீர்த்த கலசங்களுடன் உள்ளூர், வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். சந்தன காவடி, இளநீர் காவடி, பால் காவடி, உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்து தரிசனம் செய்தனர். அடிவாரம் கிரிவீதி பகுதிகளில் மேளதாளத்துடன் ஆட்டம் பாட்டத்துடன், அரோகரா கோஷத்துடன் கிரி வலம் வந்தனர். கிரிவலப் பாதையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் சிரமம் அடைந்தனர். மலைக்கோயிலில் உள்ள காலை முதல் வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. தரிசன வரிசையில் மூன்று மணிநேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கிரி வீதி, அருள்ஜோதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழநி, அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளதால் பக்தர்கள் அதிக சிரமம் அடைந்து வருகின்றனர்.