மகாவீர் ஜெயந்தி : திருப்பூர், சபாபதிபுரம் ஜெயின் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2023 10:04
திருப்பூர், சபாபதிபுரம் ஜெயின் கோவிலிலிருந்து மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடந்தது.
திருப்பூர்: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினர் சபாபதிபுரம், ஜெயின் கோவிலில் ஊர்வலம் நடத்தினர்.திருப்பூர் ஜெயின் சங்கம் சார்பில், மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. சபாபதிபுரம் பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் கோவிலில் இருந்து மகாவீரர் பல்லக்கை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக புறப்பட்டனர்.இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில், திரளான ஜெயின் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.