Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரவிந்தர் தங்கிய வீடு பக்தர்கள் ... பரமக்குடியில் கருட வாகனத்தில் முத்தாலம்மன் அருள்பாலிப்பு பரமக்குடியில் கருட வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா : லட்சக்கணக்கான பக்தர்கள் தீமிதித்தனர்
எழுத்தின் அளவு:
பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா : லட்சக்கணக்கான பக்தர்கள் தீமிதித்தனர்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2023
03:04

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா இன்று  கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழகம்,கர்நாடகத்தில் இருந்த வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி,அம்மனை வழிபட்டனர்.

பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா மார்ச் 20 ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக குண்டம் விழா  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு,ஊஞ்சல் மரத்துண்டுகளை கொண்டு  தீக்குண்டம் வளர்க்கப்பட்டது. விழாவையொட்டி பண்ணாரி அம்மனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு வீணை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இன்று  அதிகாலை2.45 மணிக்கு  படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அங்குள்ள சருகுமாரியம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு,தாரை தப்பட்டை முழங்க,மேளதாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது. குண்டத்தில் கற்பூரம் ஏற்றி  பூஜை செய்தும் மலர்களை குண்டத்தில் தூவியும் அதிகாலை 4 மணிக்கு  பூசாரி ராஜசேகர்   குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார். அதனைத் தொடர்ந்து இசைக்கலைஞர்கள், பவானிசாகர் எம்.எல்.ஏ.,பண்ணாரி, உள்ளிடோர் அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், திருநங்கைகள், கைக்குழந்தையுடன் பெண்கள், காவலர்கள், வனத்துறையினர் என லட்சக்கணக்கானோர் தீ மிதித்தனர். அதனைத் தொடர்ந்து,குண்டம் இறங்கிய  லட்சக்கணக்கான பக்தர்கள்  கோவிலுக்குள் நேரடியாக  சென்று அம்மனை தரிசித்து சென்றனர். பக்தர்கள் வசதிக்காக வெயில் தாக்காத அலுமிய கொட்டகை அமைத்திருந்தனர்.பாதுகாப்பு பணியில் ஈரோடு மாவட்ட எஸ்.பி.,சசிமோகன் தலைமையில் ஈரோடு,கோவை,நாமக்கல்,ஊட்டி,உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து போலீசார்,போக்குவரத்து போலீசார், ஊர்காவல்படையினர், என 1650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குண்டம் இறங்கும் போது பலர் குண்டத்தில்  தடுமாறி விழுந்தனர்.அவர்களை உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்து ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.குண்டத்தை சுற்றியும் தீயணைப்பு படைவீரர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தயார்நிலையில் இருந்தனர்.திருவிழா என்பதால் கர்நாடக மாநில பஸ்கள் இயக்கப்படவில்லை.திருவிழாவில் கோவில் இணைஆணையர் மேனகா,மற்றும் பரம்பரை அறங்காவலர்கள், வருவாய்த்துறையினர், மருத்துவதுறையினர்.தன்னார்வலர்கள், கலந்து கொண்டனர். ஈரோடு, கோவை, கரூர், நாமக்கல், சத்தியமங்கலம், புளியம்பட்டி, தாளவாடி, கோபி, கவுந்தப்பாடி, நீலகிரி, அன்னுார், மேட்டுப்பாளையம், மற்றும் தமிழகத்தின் வெளி மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.போக்குவரத்து கழகத்தின் சார்பில் 250க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏப்.10ம் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி; பரமக்குடி சத்தேழு கன்னிமார் கோயிலில் அருள் பாலிக்கும் வராகி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத தெப்பத் திருவிழா நடந்தது. இதில், ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; நவாமரத்துப்பட்டிபுதூர் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி ... மேலும்
 
temple news
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது, யோக நரசிம்ம சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar