குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயிலில் பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2023 04:04
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மார்ச் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. பங்குனி உத்திர திருவிழாவான நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், தீமிதிக்கும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கடும் விரதம் இருந்து, பிடிமானம் ஏதும் இல்லாமல் நேரடியாக அலகு குத்தி பறவைகாவடி எடுத்து பலர் நேர்த்திக் கடன் செலுத்தினர். சண்முகநாதப் பெருமானுக்கு தொடர்ந்து பாலாபிஷேகம் நடந்தது. மேலும் விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த நெல், காய்கறிகளை சுவாமிக்கு காணிக்கையாகவும் செலுத்தினர். அரசு விடுமுறை நாளான நேற்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொட்டது தீர்த்தவாரி உற்சவமும், மயிலாடும்பாறைக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.