Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேரில் வலம் வந்து அருள்பாலித்த ... ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரவிழா கோலாகலம் ராமநாதபுரம் வழிவிடு முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

05 ஏப்
2023
03:04

தாயமங்கலம்: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற பங்குனி பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேத்து கடன்களை நிறைவேற்றி ஆடு கோழிகளை பலியிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று இரவு மின் அலங்கார தேரோட்டம் நடைபெற உள்ளது.

இளையான்குடி அருகே பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முடிகாணிக்கை, தீச்சட்டி,கரும்பு தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா கடந்த 29ம் தேதி இரவு 11 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதையடுத்து தமிழகம் முழுவதிலிருந்து வந்திருந்த பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம்,ஆயிரங்கண்பானை, கரும்பு தொட்டில் போன்ற நேர்த்திகடன் களை செலுத்தி பொங்கல் வைத்தும்,ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். உங்கள் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்ததால் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தால் பக்தர்கள் அம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை)இரவு 7:15 மணிக்கு மின் அலங்கார தேரோட்டம் நடைபெற உள்ளது.7ம் தேதி ஊஞ்சல் உற்சவமும், பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள்,கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்,; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நடராஜர் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar