Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானல் மலைப்பகுதியில் பங்குனி ... சக்கம்பட்டி பகவதி அம்மன், மதுரகாளியம்மன் கோயில் பொங்கல் விழா சக்கம்பட்டி பகவதி அம்மன், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீர்த்தவாரியில் சோகம் 5 ஸ்ரீபாதம் தாங்கிகள் பலி : பாதுகாப்பு குறைபாடு
எழுத்தின் அளவு:
தீர்த்தவாரியில் சோகம் 5 ஸ்ரீபாதம் தாங்கிகள் பலி : பாதுகாப்பு குறைபாடு

பதிவு செய்த நாள்

06 ஏப்
2023
11:04

சென்னை: சென்னை மூவரசம்பட்டு ஊராட்சி குளத்தில் நடந்த தர்மலிங்கேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி உற்சவத்தின்போது, சுவாமிக்கு கைங்கர்யம் செய்யும் ஸ்ரீபாதம் தாங்கிகள் ஐந்து பேர் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பலியான சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நங்கநல்லுாரில், சர்வமங்களாம்பிகை சமேத தர்மலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் எட்டாம் வர்ஷிக பிரம்மோற்சவம், கடந்த மாதம், 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடைசி நாளான நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இந்த கோவிலுக்கான தீர்த்தவாரி, அருகில் உள்ள மூவரசம்பட்டு ஊராட்சி குளத்தில் நடத்தப்படும். நேற்று காலை நடந்த தீர்த்தவாரியில், சுவாமிக்கு கைங்கர்யம் செய்யும் ஸ்ரீபாதம் தாங்கிகள், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குளக்கரையில் இருந்து வானவில் போல கைகளை இணைத்து நிற்க, நடுவில் உற்சவர் தீர்த்தவாரி நடந்தது.

பலனில்லை: அப்போது, குளத்தின் கரைக்கு எதிர் பகுதியில் நின்றிருந்தவர், திடீரென குளத்தில் இருந்த பள்ளம் உள்வாங்கியதால் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற சென்ற நால்வரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர். கரையில் இருந்த நீச்சல் தெரிந்த பலர், உடனடியாக குதித்தும் பலனில்லாமல் போனது. தகவல் அறிந்து கிண்டி, வேளச்சேரி தீயணைப்பு வீரர்கள் மிதவை படகுகளுடன் விரைந்து வந்து, ஐவர் உடல்களை மீட்டனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் குளத்தில் மூழ்கி இறந்தது நங்கநல்லுார், எம்.எம்.டி.சி.ஏ., காலனியைச் சேர்ந்த வனேஷ், 19, புழுதிவாக்கம் முத்து முகமது தெருவைச் சேர்ந்த ராகவ், 19. ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த ராகவன், 22, நங்கநல்லுார், சர்வமங்களா நகரைச் சேர்ந்த சூர்யா, 22, மடிப்பாக்கம், பாலைய்யா கார்டன், திலகர் அவென்யூ முதல் தெருவைச் சேர்ந்த யோகேஷ்வரன், 23, ஆகியோர் என்பது தெரியவந்தது.

பார்வை: இதில், ராகவ், வனேஷ் ஆகியோர் சி.ஏ., படித்துள்ளனர். ராகவன் சி.ஏ., பயிற்சியில் இருந்தார். சூர்யா என்பவர், தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்தார். யோகேஷ்வரன், ஒரகடத்தில் உள்ள கார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்ட ஐவர் உடலையும், பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பழவந்தாங்கல் போலீசார் அனுப்பி வைத்தனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். இதையடுத்து, சென்னை மண்டல இணை கமிஷனர் ரேணுகாதேவி, ஆலந்துார் மண்டல குழு தலைவர் சந்திரன் உள்ளிட்டோர், சம்பந்தப் பட்ட கோவிலுக்கும், தொடர்ச்சி 14ம் பக்கம் குளக்கரைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மூவரசம்பட்டு குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடத்த போலீசார் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, ஐந்து பேர் பலியான சம்பவம் குறித்து, பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அத்துடன் தலா இரண்டு லட்சம் ரூபாயை, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

முயற்சி பலனளிக்கவில்லை: குளத்தில் உற்சவர் தீர்த்தவாரிக்காக ஸ்ரீபாதம் தாங்கிகள், வானவில் போல சுற்றி கைகோர்த்து நின்றனர். நான் கரையில் நின்று என் மொபைல் போனில் உற்சவத்தை படம் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, குளத்தில் உட்பகுதியில் இருந்த ஒருவர் நிலை தடுமாறினார். இதையடுத்து, அருகில் இருந்தவர்களும் உள்ளே மூழ்கினர். உடனடியாக, நான் உள்ளிட்ட பலர் உள்ளே இறங்கி, அவர்களை காப்பாற்ற முயன்றோம். எங்கள் முயற்சி பலனளிக்கவில்லை.

- ஜி.பி.பாபு, 54,

சபாபதி நகர், மூவரசம்பட்டு

பெற்றோர், உறவினர் கதறல்: காலையில் தீர்த்தவாரி உற்சவத்திற்கு சென்ற பிள்ளைகளை சடலமாக குரோம்பேட்டை மருத்துவமனையில் பார்த்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உயர் கல்வியை முடித்து பணிக்கு செல்லும் நிலையில், இளம் வயதில் மரணமடைந்தது, தாளமுடியாத துயரத்தை ஏற்படுத்தியது.உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய தொகுதி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான அன்பரசன் கூறியதாவது:தீர்த்தவாரியில், கோவில் நிர்வாகத்தினர், ஸ்ரீபாதம் தாங்கிகள் எனும் ஆன்மிக தன்னார்வலர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, ஒரு இளைஞர் ஆழமான பகுதிக்கு சென்றார். அவரை காப்பாற்ற முயன்றதில் ஐந்து பேர் அகால மரணமடைந்தனர். அனைவரும் படிப்பை முடித்து பணிக்கு செல்லும் பருவ வயது உடையவர்கள்.இந்த விழா பாதுகாப்பற்ற சூழலால் நடந்து உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்துவர்.

பாதுகாப்பு குறைபாடு: இச்சம்பவத்திற்கு, பாதுகாப்பு குறைபாடுகளே முக்கிய காரணமாக உள்ளதாக, தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: தீர்த்தவாரியில், 25 அர்ச்சர்கள் பங்கேற்றதில் பெரும்பாலானவர்கள் நீச்சல் தெரியாதவர்களாக இருந்துள்ளனர். குளம் 10 அடி முதல் 40 அடி வரை ஆழம் கொண்டிருந்தன. அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால், இந்த கோரச் சம்பவம் நடந்திருக்கிறது.

தீ அணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து, தகுந்த பாதுகாப்பு பணிகளை, அறநிலையத் துறை செய்திருக்க வேண்டும்.த.மா.கா., தலைவர் வாசன்: எதிர்பாராத நிகழ்வாக இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். கோவிலின் முக்கிய நிகழ்வாக தீர்த்தவாரி நடைபெற இருக்கும்போது, அதற்கு முன்னதாக கோவில் நிர்வாகமும், தமிழக அரசும் உரிய பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஆறு, ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளின் பாதுகாப்பு கருதி, ஆழம் சம்பந்தமான குறிப்பு பலகை வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று (செப்.9ல்) மலையப்பசுவாமி அனுமன் ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் நான்காவது புதன்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஆறாவது நாள் விழாவான நேற்று முன்தினம் காலை 11:00 மணி முதல் 11:30 மணி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; சாரதாம்பாள் கோவில் நவராத்திரி சிறப்பு பூஜையில் நவக்கிரக மிருத்யுஞ்ஜய ஹோமம் ... மேலும்
 
temple news
கொட்டாம்பட்டி; ஒட்டக்கோவில்பட்டி டி வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் புரட்டாசி மாத திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar