Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் 15ம் தேதி விஷூ கனி ... ராயம்பாளையம் மாரியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா ராயம்பாளையம் மாரியம்மன் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் அருகே 14 -15ஆம் நூற்றாண்டு வில்வீரன் நடுகல் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
நத்தம் அருகே 14 -15ஆம் நூற்றாண்டு வில்வீரன் நடுகல் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

07 ஏப்
2023
10:04

நத்தம், நத்தம் அருகே மனக்காட்டூரில் 14- 15 ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆற்றூர் நாடு வரலாற்று ஆய்வு மையக் குழுவின் முனைவர் மாணிக்கராஜ், சுப்பு,உலகநாத பாண்டியன், ராமு, திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர் கருப்பையா அவர்களுடன் இணைந்து நத்தம் அருகே உள்ள மணக்காட்டூர் பகுதியில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 14, 15ம் நூற்றாண்டை சேர்ந்த அப்புச்சி என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படும் வில்வீரன் நடுகலை கண்டறிந்தனர்.

இது பற்றி அவர்கள் கூறியதாவது: பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நிர்வாக வசதிக்காக தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளை பல நாட்டு பிரிவுகளாக பிரித்து இருந்தனர். அதன்படி இப்பகுதியானது புறமலை நாட்டு பிரிவின் கீழ் இருந்து வந்துள்ளது இப்பகுதியானது மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியாகும். இங்கு வாழ்ந்த வில்வீரன் ஒருவனின் மரணத்தின் நினைவாக இந்நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம். இந்நடுகல் 3.5 அடி உயரம் 1.5அடிஅகலம் உடையதாக உள்ளது. இதில் வீரன் அதன்படி இப்பகுதியானது புறமலை நாட்டு பிரிவின் கீழ் இருந்து வந்துள்ளது. இப்பகுதியானது மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியாகும். இங்கு வாழ்ந்த வில்வீரன் ஒருவனின் மரணத்தின் நினைவாக இந்நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம். இந்நடுகல் 3.5 அடி உயரம் 1.5அடிஅகலம் உடையதாக உள்ளது. இதில் வீரன் தனக்கு எதிரே நேராக பார்த்தவாறு புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வீரன் முகம் தேய்ந்த நிலையில் உள்ளது. வீரன் தனது வலது கையில் வில்லின் அம்பை பிடித்தவாறும், இடது கையில் வில்லின் நடுப்பகுதியான நாபியை பிடித்தவாறும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வீரனுக்கு வலது பக்கமாக கூந்தலை அள்ளி கட்டி முடிக்கப்பட்ட கொண்டையும் வீரனுக்கே உரிய விரிந்த மார்புடனும் இடை சிறிதாக வீரனுக்குரிய உடல் அமைப்புடனும் அழகாக வெட்டப்பட்டிருக்கிறது. இந்நடுகல் வீரனின் இடுப்புக்கு கீழ் பகுதி முழுவதும் மண்ணில் புதைந்து காணப்படுவதால் வீரனின் ஆடை மற்றும் காலில் அணிவிக்கப்பட்டு இருக்கும். அணிகலன்களை அறிந்து கொள்ள முடியவில்லை.

பண்டைய காலத்தில் மக்களின் வாழ்க்கையும் வாழ்விடமும் மலையும் மாலை சார்ந்த இடமாக இருந்தது. அவ்வாறு வாழ்ந்த மக்கள் விலங்குகளை உணவுக்காக வேட்டையாடும்போது அவற்றுடன் சண்டையிட்டு இறப்பது வழக்கமாக இருந்துள்ளது. இவ்வாறான நிகழ்வுகளில் வீர மரணம் அடையும் வீரர்களின் நினைவாக கல்நட்டு அவர்களை தெய்வமாக வழிபடுவது தமிழர்களின் சிறப்பான பண்பாட்டு மரபாகும் என்பதை இலக்கியங்கள் கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன. பண்டைய காலம் முதல் தமிழர்கள் வீரர்களை போற்றி தெய்வமாக வணங்கும் செயலுக்கு இந்த வில்வீரன் இந்நடுகல்லும் சான்றாக உள்ளது. இவ்வில் வீரன் நடுகல்லை இப்பகுதி மக்கள் அப்புச்சி என்ற பெயரில் தெய்வமாக வணங்கி வருகின்றனர். என்று கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar