மகா சனீஸ்வர பகவான் கோவிலில் விநாயகருக்கு 1008 சூரைத் தேங்காய்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2012 11:09
புதுச்சேரி: மொரட்டாண்டியில் உள்ள விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், விநாயகருக்கு 1008 சூரைத் தேங்காய் உடைக்கப்பட்டது. புதுச்சேரி அடுத்த மொரட் டாண்டியில் விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் நவக்கிரக கோவில் அமைந் துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இங்குள்ள 54 அடி உயர, கிரகசாந்தி ஸ்வர்ண கணபதிக்கு 1008 கொழுக்கட்டைகள் வைக்கப்பட்டு, கணபதி ஹோமம் நடந்தது. ஸ்வர்ண சிதம்பர கணபதிக்கு 108 லிட்டர் பால் அபிஷேகமும், கலசாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, சோடச உபசார தீபாராதனை காண்பிக்கப்பட்டு, 1008 சூரை தேங்காய்கள் உடைக்கப்பட்டது. ஆலய ஸ்தாபகர் சிதம்பரம் குருக்கள் தலைமையில் கீதாராம குருக்கள், கீதா சங்கர குருக்கள் முன்னிலையில் விழா சிறப்பாக நடந்தது.