பதிவு செய்த நாள்
08
ஏப்
2023
09:04
சோழிங்கநல்லுார், ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம் பகுதியில், கங்கையம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள, கற்பகாம்பாள் சமேத கற்பக ஈஸ்வரர் கோவிலில், 31ம் ஆண்டு விழா, 3ல் துவங்கியது.
கடந்த 5ம் தேதி, கற்பகாம்பாள், கற்பக ஈஸ்வரர், வள்ளி, தெய்வானை, முருகர், வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, லியோ தர்மலிங்கம் இல்லத்தில் இருந்து, கற்பகாம்பாளுக்கு தாய்வீட்டு சீர் எடுத்து செல்லப்பட்டது. பின், தெய்வீக திருக்கல்யாண உற்சவம், சுவாமிகளுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் தெப்பல் திருவிழா நடந்தது. இரவு, பொன் ஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இறை ஆசி பெற்றனர். இவ்விழாவை, பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் லியோ. என் சுந்தரம் முன்னின்று நடத்தினார்.