அலங்காநல்லூர் முத்தாலம்மன், கோட்டை கருப்புசாமி கோயில் பங்குனி உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2023 12:04
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே அ.கோவில்பட்டியில் முத்தாலம்மன், கோட்டை கருப்புசாமி கோயில் பங்குனி உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் 9 தெய்வங்களுக்கும் கனி மாற்றுதலை தொடர்ந்து இடையபட்டிக்கு சென்று அம்மன், அய்யனார், கருப்பு சுவாமி, சுவாமி பெட்டி அழைத்து வரப்பட்டு சக்தி கிடாய் வெட்டப்பட்டது. பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். 2ம் நாள் பொங்கல் வைத்தும், அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. கன்னிமார் மற்றும் சுவாமிகள் கோயில் சென்றடைந்தனர். கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.